2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கோழி இறைச்சிக் கடையில் பணம் திருடிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூன் 28 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, செங்கலடி நகரப் பகுதியில் அமைந்துள்ள கோழி இறைச்சிக் கடையில் 15 ஆயிரம் ரூபாவை திருடிய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை இன்று செவ்வாய்க்கிழமை காலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கடையின் பின்பகுதியை தான் துப்புரவு செய்துகொண்டிருந்த வேளையில் திடீரென்று  கடைக்குள் நுழைந்த மூவர், 15 ஆயிரம் ரூபாவை திருடிச் சென்றுள்ளனர். இதனைக் கண்டு அவர்களை துரத்திப் பிடிக்க முற்பட்டபோதும், அவர்கள் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸில் செய்த முறைப்பாட்டில் கடை உரிமையாளர் தெரிவித்திருந்தார்;.  

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு 22 மற்றும் 36 வயதுகளையுடைய இருவரைக் கைதுசெய்துள்ளதுடன், மற்றைய சந்தேக நபரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X