Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
கிழக்கு மாகாண விவசாயிகள்,பாற்பண்ணையாளர்கள், கைப்பணியாளர்கள், மீன் வளர்ப்போர், கால்நடை மற்றும் கோழி வளர்ப்போர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கில் கிழக்கின் எழுச்சி-2015 கண்காட்சியும் விற்பனையும் சித்தாண்டி வந்தாறுமூலை மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யபட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல் மற்றும் விநியோக அமைச்சர் கே.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மேற்படி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் 17ஆம்,18ஆம்,19 ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை இலவசமாக நடைபெறவுள்ள கண்காட்சி பற்றி பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நீர்ப்பாசனத் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கிழக்கு பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞான பீட மாணவர்களின் பங்களிப்பு அதிகம் தேவை எனக் கருதியும் எல்லோருக்கும் மத்திய நிலையமாக சித்தாண்டி அமைந்துள்ளதனாலும் குறித்த இடத்தை தெரிவு செய்துள்ளோம்.
தனது அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்கள் தமது பங்களிப்பை செய்யவுள்ளன. புதிய நெல் இனங்கள் மற்றும் ஏனைய உப உணவுப் பயிர்கள், விவசாய இரசாயனப் பொருட்கள் மற்றும் பசளை வகை, விவசாய உபகரணங்கள், இயந்திரங்கள்,உயிர் வாயு உற்பத்தி, பாற்பண்ணை முகாமைத்தவம், கால்நடைத் தீவனம் மற்றும் புல்உற்பத்தி, கோழி வளர்ப்பும் முட்டை உற்பத்தியும், கைப்பணி உற்பத்திப் பொருட்கள், மீன்பிடி உபகரணங்களும் செயற்பாடுகளும் கொடுவா, இறால் மற்றும் அலங்கார மீன் வளர்ப்பு முறைகள், கூட்டுறவுத்துறை செயல்பாடுகள்,நவீன விவசாய நீர்ப்பாசன தொழில்நுட்பங்கள் என்பன காட்சிப்படுத்தப்படவுள்ளன என்றார்.
இதன் ஆரம்ப நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன், எஸ். வியாளேந்திரன், மாகாண சபை உறுப்பினர்களான அலிசாகிர் மௌலானா, எஸ்.சந்திரகாந்தன்,ஆர்.துரைரெத்தினம், ஜி. கருணாகரன் மற்றும் விசேட அதிதியாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ். அபேகுணவர்தன ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இறுதிநதள் நிகழ்வில், பிரதம அதிதியாக வடமாகாண விவசாய,கால்நடை, நீர்ப்பாசன, நீர் வழங்கல் மற்றும் கூட்டுறவு அமைச்சர் பி.ஐங்கரநேசன், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.சிறிநேசன், கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் என்.இந்திரக்குமார், மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.சுபைர்,எம்.நடராசா,ஜி.கிருஷ்ணபிள்ளை, எம்.சிப்லி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago