Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் கலைப்பீடத்தின் இரண்டு மாணவக் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பைத் தொடர்ந்து, அப்பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதில் பதிவாளர் அமரசிங்கம் பகிரதன் தெரிவித்தார்
செவ்வாய்க்கிழமை (20) மாலை நடைபெற்ற நிர்வாகக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஓன்றுகூடலுக்காக கலைப்பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களை மூன்றாம் வருட மாணவர்கள் அழைத்தபோது, வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்துள்ளது. இதன்போது, பாதிக்கப்பட்ட 06 மாணவிகள் உடல் உபாதை காரணமாக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் விரிவுரைகள் மறுஅறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் விடுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
34 minute ago
41 minute ago
53 minute ago