2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண அரசாங்க வைத்தியசாலைகளில் 148 வைத்தியர்கள் தேவை

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 24 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்திலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளுக்கு 148 வைத்தியர்கள் தேவைப்படுவதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் சனிக்கிழமை (23) மாலை நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இதனைக் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறையில் பல பிரச்சினைகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் மற்றும் தாதியர் தேவைப்பாடு உள்ளது. இந்த வைத்தியசாலையின் ஆண்கள் விடுதிப் புனரமைப்பு, சுற்றுமதில் நிர்மாணம் உள்ளிட்டவற்றைச்; செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்த வைத்தியசாலையை தரம் உயர்த்த வேண்டிய தேவை உள்ளதால், இதற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கையைப் பெற்று மாகாண அமைச்சரவையுடன்  கலந்துரையாடி அங்கிகாரத்தைப் பெற்று தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.  

கிழக்கு மாகாணத்தில் இந்த வைத்தியசாலை மாத்திரமல்ல,  அனைத்து வைத்தியசாலைகளுக்கும் சென்று அனைத்துக் குறைகளையும் கேட்டு நிவர்த்தி செய்யவேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X