Princiya Dixci / 2016 மே 03 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாண நூலகப் பணியாளர்கள் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட நூலகப் பணியாளர்களின் ஒன்றுகூடலும் கௌரவிப்பு நிகழ்வும், நேற்று திங்கட்கிழமை (02) மட்டக்களப்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த அங்கத்தவர்களைக் கொண்டு இப்பணியாளர் ஒன்றியம் இயங்கி வருகின்றது.
இந்த நிகழ்வில் கடந்த காலங்களில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 11 சிரேஷ்ட நூலகர்கள் பொன்னாடை அணிவித்து சான்றிதழ்கள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டதாக ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் நூலகர் திருநாவுக்கரசு சரவணபவன் தெரிவித்தார்.
இந் pகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல், அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி உட்பட மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் நூலகர்களும் பங்குபற்றினர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago