2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண மீனவர்களுக்கு வலைகள் வழங்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 10 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு பெறுமதியான மீன்பிடி வலைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என  மீன்பிடி மற்றும் நீரகவளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கிராமியப் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் ஏற்பாட்டில் மீன்பிடி மற்றும் நீரகவளங்கள் அமைச்சரை வாழைச்சேனை ஹைராத் மீனவச் சங்கத்தினர் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் திங்கட்கிழமை (09)  சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆழ்கடல் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

படகுகளின் உரிமையாளர்கள் மாற்றம் பெற்றுள்ளதால், பழைய உரிமையாளர்களுக்கு கிடைக்கும்  மானியங்கள், புதிய உரிமையாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

மீனவர்கள் பயன்படுத்தும் தொடர்பு சாதனக் கருவிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை  அமைச்சரிடம் வாழைச்சேனை ஹைராத் மீனவ சங்க பிரதிநிதிகள் முன்வைத்தனர்.

தொடர்பு சாதனக் கருவிகளை வழங்குவது தொடர்பில் பரிசீலித்து எதிர்காலத்தில் பெற்றுத்தர முயற்சி செய்வதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் கூறினார்.


 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X