Suganthini Ratnam / 2016 மே 17 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்,வடிவேல் சக்திவேல்
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், கிழக்கு மாகாண மக்களுக்கும் நிவாரணம் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் இன்று செவ்வாய்க்கிழமை அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் தெரிவிக்கையில், 'காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதை நாங்கள் வரவேற்கின்றோம்.
காலநிலை மாற்றத்தால்; கிழக்கு மாகாணமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தி, அம்மாகாண மக்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்' என்றார்.
'மேலும், இப்பகுதியில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. அவற்றுக்கான நட்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கு தங்களது அமைச்சினால் நடவடிக்கை எடுக்கவும்' எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
6 minute ago
22 minute ago
25 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
25 minute ago
45 minute ago