2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 2,500 உறுதிப்பத்திரங்கள் வழங்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 10 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்கள் இன்றியுள்ள 2,500 பேருக்கு எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி மட்டக்களப்புக்கு வருகை தரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைப்பார் என அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

குடியிருப்புக் காணிகளுக்கான உறுதிகள் கிடைக்காமல் இருந்த 130 பேருக்கு உறுதிகள் வழங்கும் நிகழ்வு, திருகோணமலை குளக்கோட்டன் நூலகக் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (09) நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,'இனப் பிரச்சினைக்கான தீர்வு தாமதமின்றிக்  காணப்பட வேண்டும் என்பதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்று கிழக்கு மாகாணமும் பாராபட்சமற்ற அபிவிருத்தித் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதையே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூவின மக்களும் வலியுறுத்துகின்றார்கள்' என்றார்.

'மேலும், அரசியலமைப்பின் 13ஆவது  திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற காணி அதிகாரத்தை விட்டுக் கொடுக்கின்ற ஒரு மாகாண சபையாக கிழக்கு மாகாணம் ஒருபோதும் இருக்காது.

அரசியல் யாப்பில் வழங்கிப்பட்டிருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தாமல், மேலும் அதிகாரம் வேண்டும் என்று கூக்குரல் இட முடியாது. இருக்கின்ற அதிகாரங்களை ஆகக் கூடியளவு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X