Suganthini Ratnam / 2016 மே 15 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.ஹனீபா, வா.கிருஸ்ணா, ஏ.எம்.ஏ.பரீத், ரீ.கே.றஹ்மத்துல்லா, எப்.முபாரக், வடிவேல் சக்திவேல்,த.தவக்குமார், பதுர்தீன் சியானா
கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடி, மின்னலுடன் கூடிய அடை மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டம்
இம்மாவட்டத்தில்; சனிக்கிழமை (14) காலை 8.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில் 85.4 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம்தெரிவித்தது.
இம்மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய அடை மழை பெய்து வருவதால், தாழ்நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, காத்தான்குடி, மட்டக்களப்பு நகர், ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, ஓட்டமாவடி ஆகிய பகுதிகளிலுள்ள தாழ்நிலங்களே நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.
மழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளநீர் நிரம்பியுள்ளதை காண முடிகின்றது. சில இடங்களில் வீசிய கடும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ளதையும் காண முடிகின்றது.
கடும் மழையினால் படுவான்கரைப்பகுதியில் செய்கை பண்ணப்பட்ட பல ஏக்கர் நெற்காணிகள் நீரில் முழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூங்கிலாற்றினூடாக அதிக வெள்ளநீர் செல்வதனால் மூங்கிலாற்று மதகின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம்
இம்மாவட்டத்தில் சனிக்கிழமை (14) காலை 8.30 மணி முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 425.11 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலைய அவதானிப்பாளர் எஸ்.ரத்நாயக்க தெரிவித்தார்.
மேலும், பொத்துவில் பிரதேசத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 145.8 மில்லிமீற்றர் மழை வீழ்;ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த மழை காரணமாக பொத்துவில், திருக்கோவில், லகுகல, பாணமை, அம்பாறை நகர், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில். நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, மருதமுனை ஆகிய பகுதிகளிலுள்ள மக்களின் குடியிருப்புகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.
அநேகமான உள்வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளயுடன், போக்குவரத்துகளும்; பாதிக்கப்பட்டுள்ளன. தாம்போதிகளிலும் வாய்க்கால்களிலும் நீர் பெருக்கெடுத்துள்ளன.
அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவில வீசிய கடும் காற்றுக் காரணமாக தென்னை மரங்கள் முறிந்து விழுந்ததில் மதில்கள் உடைந்துள்ளன.
கடல் கொந்தளிப்பாக இருப்பதால் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், தமது தொழில் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆழ்கடல் மீனவர் சங்கத் தலைவர் ஏ.உதுமாலெப்பை தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டம்
இம்மாவட்டத்தில்; சனிக்கிழமை (14) காலை 8.30 மணி முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில் 90.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அம்மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வருகின்ற அடை மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள், வயல் நிலங்கள், வீதிகள் என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தொடர்ச்சியான மழை காரணமாக கந்தளாய்க்குளம், பரவிப்பாஞ்சான்குளம், கல்மெட்டியாவக்குளம் போன்றவற்றின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

53 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago