Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாணத்தில் வீட்டு வசதியின்றியுள்ள 57 குடும்பங்கள் சுயமாக வீடுகளைக் கட்டுவதற்காக முதற்கட்ட நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஐ.எல்.எம்.அக்ரம் தெரிவித்தார்.
இதற்காக மட்டக்களப்பில் 22 குடும்பங்களும் திருகோணமலையில் 15 குடும்பங்களும் அம்பாறையில் 20 குடும்பங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வீடுகளைக் கட்டுவதற்காக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் படி நிதி உதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீட்டு வேலையை ஆரம்பிப்பதற்காக முதற்கட்ட நிதி உதவியாக இக்குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டக் கொடுப்பனவாக 60 ஆயிரம் ரூபாயும் மூன்றாம் கட்டக் கொடுப்பனவாக 40 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
எதிர்வரும் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதிக்கிடையில் இந்த வீடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டு புதிய வீட்டில் பயனாளிகள் குடியிருக்க வேண்டும் என்ற வகையில் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025