Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக மத்திய அரசாங்கத்தால் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரதியமைச்சர் பைஷால் காசீம் தெரிவித்தார்.
காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துடனான சந்திப்பு, அங்கு திங்கட்கிழமை (19) மாலை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'நல்லாட்சி அரசாங்கத்தில் சுகாதாரத்துறை மேம்படுத்தப்பட்டு வருவதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியேர் சுகாதாரத் துறையை முன்னேற்றுவதில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றனர்' என்றார்.
'மாகாண சபையின் கீழுள்ள வைத்தியசாலைகள், சுகாதார அலுவலகங்கள், ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.
மேலும், மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பிரதேசத்திலுள்ள யுனாணி வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது' எனவும் அவர் கூறினார்.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago