2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகின்றமை தொடர்பில் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர்; எம்.ரி.ஏ.நிசாம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் கடந்த ஜுலை, ஓகஸ்ட் மாதங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டதாகவும் இதன் மூலமே இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில்; 151,262 தமிழ் மாணவர்;களும் 161,700 முஸ்லிம் மாணவர்களும் 81,580 சிங்கள மாணவர்களும் கல்வி கற்கின்றனர்.

இம்மாகாணத்தில்; முஸ்லிம் பாடசாலைகளை விட தமிழ்ப் பாடசாலைகள் கூடுதலாக காணப்படுகின்றபோதிலும், தமிழ்ப் பாடசாலைகளில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நல்லது அல்ல.
இந்த நிலை தொடருமானால் மாகாண கல்வி வளப்பங்கீடுகளிலும் பாரிய மாற்றம் ஏற்படும் சந்தர்ப்பமுண்டு. இதன் மூலம் தேவையற்ற வாதங்கள் முன்வைக்கப்படும். இது தொடர்;பில் மாகாணத்திலுள்ள அரசியல்வாதிகளுக்கு தெளிவூட்டவுள்ளதாகவும் அவர் கூறினார்.

வறுமை, பொருளாதாரப் பிரச்சினைகள், குடும்ப தலைவர்கள் இல்லாமை, பிள்ளைகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வமின்மை, குடும்பக்கட்டுப்பாடு உள்ளிட்டவைகளே பாடசாலைகளில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படுவதற்கு காரணமெனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X