Suganthini Ratnam / 2016 மே 03 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
தற்போது நிலவுகின்ற கடும் வெப்பமான காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள 1,832 முன்பள்ளிகள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை மூடப்பட்டுள்ளதாக அம்மாகாண முன்பள்ளிப் பணியகத்தின் தவிசாளர் பொன். செல்வநாயகம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் திங்கட்கிழமை (02) வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் கல்வி அபிவிருத்திக் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது, வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளை நண்பகல் 12 மணியுடன் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாமுக்கு அம்மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி பணித்தார்.
இந்நிலையிலேயே, இம்மாகாணத்திலுள்ள முன்பள்ளிகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 56,650 சிறார்கள் முன்பள்ளிகளில் கற்கிறார்கள். சுமார் 4,065 ஆசிரியர்கள் கடமை புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago