2025 மே 09, வெள்ளிக்கிழமை

குழந்தையை பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டு பெண் தப்பியோட்டம்

Niroshini   / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
பிச்சைக்காரனிடம் குழந்தையொன்றைக் கொடுத்து விட்டு பெண் ஒருவர் தப்பியோடிய சம்பவமொன்று மட்டக்களப்பு நகரில் செவ்வாய்க்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளது.

ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தையொன்றை பெண்ணொருவர் அவ்விடத்தில் நடமாடிய பிச்சைக்காரனிடம் கொடுத்து பணம் தருமாறு கேட்டுள்ளார்;.

பிச்சைக்காரன் பணம் கொடுக்க மறுக்கவே குறித்த பெண், குழந்தையை பிச்சைக்காரனிடம் கொடுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

குறித்த பிச்சைக்காரன் அங்கு வந்த சிலரிடம் இதை தெரிவித்ததையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த தாம், குறித்த குழந்தையைப் பெற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் பிரிவில் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X