Editorial / 2019 ஏப்ரல் 17 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிரா காட்டுப் பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மூன்றை, அப்பிரதேச இளைஞர்கள், நேற்று (16) முற்றுகையிட்டு, 19 கோடா பெரல்களைக் கைப்பற்றினர்.
கண்டியல் ஆறு, அடைசல், நல்லதண்ணீர் ஓடை ஆகிய குளங்களுக்கு அருகில் இந்தக் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் செயற்பாடுகள் செயற்பட்டு வந்தமையை அறிந்த பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து, இவ்வாறு முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது கைப்பற்றிய பெரல்களை, உழவு இயந்திரத்தில் எடுத்துச்சென்று, வவுணதீவு பிரதேச செயலகத்தில், பிரதேச உதவி செயலாளர் திருமதி சுபா சதாகரன் ஊடக, கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago