2025 மே 02, வெள்ளிக்கிழமை

கசிப்பு நிலையம் முற்றுகை; ஒருவருக்கு பிணை

Editorial   / 2020 மே 22 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புத்தம்புரி பிரதேசத்தில் இயங்கிவந்த கசிப்புத் தயாரிப்பு நிலையமொன்று, பொலிஸாரால் இன்று (22) முற்றுகையிடப்பட்டுள்ளது.

அங்கிருந்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டதுடன், ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லிலீற்றர் கோடாவும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளனவென, பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.ஏ.வஹாப் தலைமையிலான குழுவினர் இம்முற்றுகை நடவடிககையில் ஈடுபட்டனர்.

கைதுசெய்யப்பட்ட நபர், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டதையடுத்து, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த கசிப்புத் தயாரிப்பு நிலையத்திலிருந்து தப்பியோடிய மற்றுமொருவரை பொலிஸார் தேடிவருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X