2025 மே 01, வியாழக்கிழமை

கசிப்புடன் இளைஞர்கள் இருவர் கைது

Janu   / 2023 டிசெம்பர் 17 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு-  கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈரளக்குளம், பஞ்சுமரத்தடி காட்டுப் பிரதேசங்களில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின்போது 8 பாரிய பரல்கள் கசிப்பு மற்றும் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கரடியனாறு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் குறித்த சுற்றி வளைப்பை மேற்கொண்டதாகவும்  கைது செய்யப்பட்ட இருவரும், சந்திரவெளி மற்றும் சித்தாண்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பில்  கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அஸ்ஹர் இப்றாஹிம்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .