2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கஞ்சா சுருட்டுப் புகைத்த மூவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூன் 12 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நதியா பீச் (கடற்கரைப்) பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கஞ்சா சுருட்டுப் புகைத்துக்கொண்டிருந்த மூன்று பேரைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர்கள் கஞ்சாவுடன் நடமாடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று சுற்றிவளைப்பை மேற்கொண்டு கஞ்சா சுருட்டுப் புகைத்துக்கொண்டிருந்த இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொள்வதாகவும் அவர்களை  நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X