2025 மே 10, சனிக்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

George   / 2016 ஜனவரி 16 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இருவரைக் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைதுசெய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் நிலைய பொறுப்பதிகாரி சி.மாலேகம் இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.
 
மெனராகல பிரதேசத்திலிருந்து செங்கலடி நகரை நோக்கிவந்த மோட்டார் சைக்கிள் ஒன்றினை கரடியனாறு சோதனைச் சாவடியில் நிறுத்தி பொலிஸார் சோதனையிட்டபோது மறைத்துவைக்கப்பட்டிருந்த 488 கிராம் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
 
இச்சம்பவம் தொடர்பாக மேலாதிக விசாரணை மேற்கொண்டுவரும் கரடியனாறு பொலிஸார் குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கையெடுத்துள்ளதாகக் கூறினர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X