2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கஞ்சாவுடன் மூவர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 06 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிச் நகர்  மற்றும் மக்காமடி ஆகிய பகுதிகளில் மூன்று பேரை இன்று வெள்ளிக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.  

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து,  சம்பவ இடங்களுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். இதன்போது சந்தேக நபர்களிடம் கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிச் நகர் கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரிடமிருந்து ஐந்து கிராம் 100 மில்லிகிராம் கஞ்சாவையும் மக்காமடி வீதியைச் சேர்ந்தவர்களான 19 வயதுடைய இளைஞரிடமிருந்து நான்கு கிராம் 200 மில்லிகிராம் கஞ்சாவையும் 21 வயதுடைய  இளைஞரிடமிருந்து ஐந்து கிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X