2025 மே 10, சனிக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறை

Gavitha   / 2016 ஜனவரி 17 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹூஸைன்

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கஞ்சா வைத்திருந்தார் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தர் ஒருவருக்கு ஐந்து வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கல்முனைக்குடி 9, மத்ரசா வீதியைச் சேர்ந்த (வயது 30) குடும்பஸ்தருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர், கடந்த வெள்ளிக்கிழமை 47 கிராமும் 210 மில்லி கிராமும் நிறையுடைய கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதேநாள், கல்முனை நீதவான் ஐ.ரி. றஸ்ஸாக் முன்னிலையில் மேற்படி நபர் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவருக்கு 9 ஆயிரத்து 400 ரூபாய் தண்டப்பணம் விதித்ததோடு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X