2025 மே 08, வியாழக்கிழமை

கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்       

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச சபைப் பிரிவில் கட்டாக்காலியாகத் திரியும் மாடுகளை அவற்றின் உரிமையாளர்கள் கட்டிப் பாதுகாப்பாக வளர்க்குமாறு அப்பிரதேச சபைச் செயலாளர் எஸ்.குபேரன் நேற்று புதன்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இப்பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பழுகாமம், கோவில் போரதீவு, முனைத்தீவு, பெரியபோரதீவு, பொறுகாமம், வெல்லாவெளி, மண்டூர் போன்ற பகுதிகளில் இரவு வேளைகளில் பல மாடுகள் கட்டாக்காலியாகத் திரிகின்றன. இதனால், விபத்துகள் சம்பவிப்பதுடன், பயணிகளும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இதைக் கருத்திற்கொண்டு மேற்படி கிராமங்களில் பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள் ஒலிபெருக்கி மூலம் கட்டாக்காலியாகத் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த அறிவித்தலை பொதுமக்கள் பின்பற்றாது, அவர்களின் மாடுகள்  கட்டாக்காலியாக திரிவதைக்  கண்டால், அம்மாடுகளைப் பிடித்து  உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X