Niroshini / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வடிவேல் சக்திவேல்
உளநல தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம் கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளை நடத்தவுள்ளது.
அங்கோடை மனநல வைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணர் எம்.கணேசன் தலைமையின் கீழ் உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் அனுசரணையில் நடத்தப்படும் இப்போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே ரூபாய் 15000.00,10000.00, 5000.00 பணப்பரிசும் உளவியல் விருதும் வழங்கப்படும்.
'கௌரவமான உளநல சேவை' அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனும் தலைப்பில் ஆயிரம் சொற்களுக்கு மேற்படாமல் கட்டுரையும் இருபது வரிகளுக்கு மேற்படாமல் கவிதையும் எழுதப்பட வேண்டும். வயது வித்தியாசமின்றி ஆர்வமுள்ள அனைவரும் பங்குபெறக்கூடிய இப்போட்டியில் ஒருவர் ஒரு போட்டியில் மாத்திரமே பங்குபற்ற முடியும்.
ஆக்கங்கள் யாவும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் பணிப்பாளர்,சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம், இல :25/3, 4ஆம் குறுக்குஇ கல்லடி – வேலூர், மட்டக்களப்பு எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு 0776984338அல்லது 0754362897 எனும் கையடக்கத்தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியம் என மேற்படி கற்கை நிலையத்தின் பணிப்பாளர் பிரான்சிஸ் தேவரஞ்சினி தெரிவித்தார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago