2025 மே 09, வெள்ளிக்கிழமை

கடும் மழையால் மட்டு.மாவட்டத்தின் இயல்புநிலை பாதிப்பு

Editorial   / 2019 நவம்பர் 29 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக, தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக வாகரை, வாழைச்சேனை, ஓட்டமாவடி, கிரான் போன்ற பிரதேசத்திலுள்ள பல வீதிகளில் நீர் அதிகமாகக் காணப்படுவதுடன், சிலரது குடியிருப்பு காணிக்குள் நீர் காணப்படுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்தவகையில் வெள்ளிக்கிழமை காலை முதல் 24 மணித்தியாலங்களில், மட்டக்களப்பு நகரில் 102.4 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், நவகிரி ஆறு 96.1 மில்லி மீற்றர், தும்பங்கேணி 74.0 மில்லி மீற்றர், மயிலம்பாவெளி 65.3 மில்லி மீற்றர், பாசிக்குடா 23.0 மில்லி மீற்றர், உன்னிச்சை 111.0 மில்லி மீற்றர், வாகனேரி 40.7 மில்லி மீற்றர், கட்டுமுறிவு குளம் 27.0 மில்லி மீற்றர், உறுகாமம் 103.5 மில்லி மீற்றர், கிரான் 20.5 மில்லி மீற்றரும் மழைவீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய அதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்,  கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றமையால் வாழைச்சேனை, பாசிக்குடா, வாகரை, ஓட்டமாவடி போன்ற பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், காலநிலை மாற்றம் காரணமாக மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

இதன் காரணமாக மீனவர்களின் அன்றாட வாழ்க்கைப் பாதிக்கப்பட்டு காணப்படுவதுடன், அன்றாடத் தொழிலுக்கு செல்லும் கூலித் தொழிலாளர்களும் தொழிலுக்குச் செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனர்த்தக் குழு தொடர்ந்தும் தயார் நிலையில் செயற்பட்டு அனர்த்தத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன், படகுச்சேவை, அனர்த்த நிவாரண சேவை, பாதுகாப்புப் பிரிவு, பொதுமக்கள், முப்படையினர் தயார் நிலையில் இருப்பதாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X