2025 மே 08, வியாழக்கிழமை

கண்டன அறிக்கை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் 16.12.2015 அன்று நாடாளுமன்றத்தில் வடக்கு, கிழக்கில் வீட்டுத்திட்டங்களின்போது குறிப்பாக, கிராம உத்தியோகஸ்தர்கள் பணத்தை வாங்கி விட்டு மோசடி செய்வதாக கூறியுள்ளமையைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர்கள் சங்கம் நேற்று வியாழக்கிழமை  மாலை கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ள கருத்தை எமது மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. எத்தனையோ நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்;ட அமைச்சர்கள் இதுவரையில் தெரிவிக்காத கருத்தை இவர் தெரிவித்துள்ளார்.

அவர் எங்கே எப்போது என்பதைத் நிருபிக்க வேண்டும், நிருபீக்காவிட்டால், அவரது கருத்தை வாபஸ்பெற வேண்டும் என எமது சங்கம் கேட்டுக்கொள்வதுடன், இவ்விடயம் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் இர.சம்பந்தன் மற்றும், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் ஆகியோருக்கும், இவ்விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X