2025 மே 09, வெள்ளிக்கிழமை

கணவன், மனைவிக்கு வீடு புகுந்து தாக்குதல்

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

போதைப்பொருள்களை வீதிகளில் நின்று பாவிக்க வேண்டாம் என்று கூறிய கணவன், மனைவிக்கு, வீடு புகுந்து பலத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று, நேற்று (09) இடம்பெற்றுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனைப் பகுதியில் இளைஞர் கூட்டமொன்று, வீதியோரம் நின்று தினந்தோறும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதாகவும் அதனால் பாடசாலை செல்லும் மாணவிகள் பெரிதும் அசௌகரிகம் அடைவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் சம்மந்தப்பட்ட இளைஞர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டால் கணவனுக்கும் மனைவிக்கும் சுமார் 15 பேர் கொண்ட குழுவினர், வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கணவனும், மனைவியும், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, இதன் மேலதிக விசாரணைகளை, வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X