2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கணவன் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம்

Freelancer   / 2022 ஒக்டோபர் 08 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு - காத்தான்குடி, ஆரையம்பதியில் 60 வயதுடைய வயோதிபர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று இரவு 8 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரையம்பதி மாவிலந்துறயைச் சேர்ந்த 60 வயதுடைய 7 பிள்ளைகளின் தாயாரான நவரெத்திணம் சோதிமலர் என்பவரே இதில் உயிரிழந்துள்ளார்.

பிள்ளைகள் அனைவரும் திருமணம் முடித்து வேறு பிரதேசத்தில் வாழ்ந்துவருவதுடன், கணவனும் மனைவியும் தனிமையில் வாழ்ந்து வரும் நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவதுடன் கணவன் மனைவியைவிட்டு வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஒரு மாதகாலமாக கல்லாறு பிரதேசத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று அவரை தேடி மனைவி சென்று சமாதானம்  பேசி அழைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில்  நேற்று இரவு 8 மணியளவில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு கணவன் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஓப்படைப்பதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X