Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 22 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பாறுக் ஷிஹான்
“எல்லா தாய்மார்களின் கனவுகள் நனவானாலும் எல்லா பிள்ளைகளும் வல்லவராகவும் நல்லவராகவும் மாறினால் நாடு உருப்படும்” என, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்புதுறை, துறைநீலாவணை கண்ணகி சனசமூக நிலைய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது, அங்கு கருத்து வெளியிடுகையில் அமைச்சர் இதனைக் கூறியதுடன், அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,
“இங்கு உள்ள தாய்மாருக்கு பல கனவுகள் உள்ளதை நான் அறிவேன். தனது பிள்ளை படிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கனவுகள் இருக்கலாம். தனது பிள்ளை சிறந்த பிரஜையாக வல்லவராக நல்லவராக வரவேண்டும் என்பதே அவர்களின் கனவு.
எல்லா தாய்மார்களது கனவுகள் நனவாகினாலும், எல்லா பிள்ளைகளும் வல்லவராகவும் நல்லவராகவும் மாறினால் நாடு உருப்படும்.
எனது தாய்க்கும் ஒரு கனவு இருந்தது. தனது மகன் நாட்டிற்கு நல்லவராக வரவேண்டும். நாலு பேர் அவரை போற்றி பாராட்ட வேண்டும். அந்த கனவு மெல்ல மெல்ல நனவாகி வருகின்றது. அதை பார்ப்பதற்கு எனது தாய் உயிருடன் தற்போது இல்லை.
ஆகவே, என் தாயின் கனவுக எனக்கு ஞாபகம் இருக்கின்றது. எங்கும் வாழும் தாய்மார்களின் கனவுகளையும் நனவாக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago