2025 மே 10, சனிக்கிழமை

கம்பெரலிய திட்டத்தில் வீதி புனரமைப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புதூர் திமிலைதீவு பிரதான வீதியின் 05ம் குறுக்கு வீதியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனினால் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலிய நிகழ்ச்சித் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொங்கிறீட் வீதியாகப் புனரமைக்கும் செயல்திட்டத்தை  ஆரம்பிக்கும் நிகழ்வு  செவ்வாய்க்கிழமை புதூர் வட்டார உறுப்பினர் இரா.அசோக் தலைமையில் நடைபெற்றது.மேற்படி வட்டார உறுப்பினரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க மேற்படி வீதி புனரமைப்பிற்காக கம்பெரலிய திட்டத்தினூடாக 02 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இவ்வீதி புனரமைப்புப் பணிகள் புதூர் ஆனந்தா சனசமூக நிலையம் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை ஆகியவற்றின் இணைப் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.இவ்வீதி அபிவிருத்தி செயல்திட்டத்தினை மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர் அ.கிருரஜன் மாநகர பொறியிலாளர் திருமதி. சித்திராதேவி லிங்கேஸ்வரன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X