2025 மே 10, சனிக்கிழமை

கருத்துப்பகிர்வு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 20 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

'உத்தேச (புதிய) அரசியல் யாப்பும் இலங்கைத் தமிழ் பேசும் மக்களும்' எனும் தலைப்பில் சமகால சூழ்நிலை பற்றிய கருத்துப்பகிர்வு எதிர்வரும் 23ஆம் திகதி பிற்பகல் 03 மணிக்கு மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு சமூகப் பொருளாதார, கல்வி, அரசியல், சுற்றுப்புறச்சூழல் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இச்சமகால சூழ்நிலை பற்றிய கருத்துப் பகிர்வு -01 இல், கிழக்குப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த.கிருஷ்ணமோகன் கருத்துரை வழங்கவுள்ளார்.

இங்கு அறிமுகவுரையை பொருளாளர் கே.ஜீ.அருளானந்தமும் நன்றியுரையை ஆ.கி.பிரான்சிஸும் நிகழ்த்தவுள்ளனர்.
கடந்த ஒரு வருடகாலமாக செயற்பட்டுவரும் இந்த  அமைப்பினர் அரசியல், பொருளாதார, சமூக விடயங்கள் சார் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தொடர்ச்சியாக இதுபோன்ற கருத்துப்பகிர்வுகளை மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தாம் நடத்தவுள்ளதாகவும் அபிவிருத்தி மையத்தின் செயலாளர் ஆ.கி.பிரான்சிஸ் தெரிவித்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X