2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2016 மே 23 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வழிகாட்டல் ஆசிரியர்கள், வழிகாட்டல் ஆலோகர்கள், கல்வி அதிகாரிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு உலகத் தொழிலாளர் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

திறன் அபிவிருத்தி தொழில்நுட்பக் கல்வி அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தொழில்நுட்பக் கல்வி மற்றும் வாழ்க்கைத்தொழில் கல்வியை வழங்கும் நிறுவனங்களின் அமைப்பான மாவட்ட தொழில்நுட்ப, தொழிற்பயிற்சி ஒருங்கிணைப்பு அமைப்பால் இக்கருத்தரங்கு  நடத்தப்படவுள்ளதாக இவ்வமைப்பின் தவிசாளரும் மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபருமான ரி.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்களையும் க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தி அடையாத மாணவர்களையும் உயர்தரத்தில் பல்கலைக்கழகம் செல்லாத மாணவர்களையும் தொழில்நுட்பக் கல்வியில் இணைத்துக்கொள்ளும்  செயற்;பாடாக இக்கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து 45 ஆசிரியர்களும் பட்டிருப்புக்  கல்வி வலயத்திலிருந்து 22 ஆசிரியர்களும் மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்திலிருந்து 33 ஆசிரியர்களும் வாழைச்சேனைக் கல்வி வலயத்திலிருந்து 12 ஆசிரியர்களும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலிருந்து 46 ஆசிரியர்களுமாக 158 ஆசிரியர்கள் கலந்துகொள்ள உள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X