Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வடிவேல் சக்திவேல்
கடலில் கரையை அண்டியதாக காணப்படும் ஜெலி மீன்கள் காரணமாக கரைவலை மீன்பிடித் தொழிலில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கரைவலை மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பொதுவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை, தென் எருவில்பற்று பிரதேச எல்லைக்குட்பட்ட குருக்கள்மடம் தொடக்கம் பெரியகல்லாறு வரையிலான கடலில் பல இடங்களில் இவ்வாறான ஜெலி மீன்கள் கூடுதலாக காணப்படுகின்றன.
அதாவது கரைவலையூடாக மீன் பிடியினை மேற்கொள்ளும் போது இந்த ஜெலி மீன்கள், வலைகளில் சிக்கி ஏனைய மீன்கள் பிடிபடுபதை தடுக்கின்றன.
அதுமாத்திரமின்றி வலைகளில் கூடுதலாக ஜெலி மீன்கள், சிக்குகின்ற சந்தர்ப்பத்தில் வலையினை கடலில் இருந்து கரைக்கு வெளியேற்றுவதில் பாரிய சிக்கல் நிலவுகின்றது.
சில வேளைகளில் வலையை வெட்டி வெளியேற்ற வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது.
இம்மாதம் முழுவதும் கரைவலை மீன்பிடி பருவகாலமாகும். இக் காலத்தில் மாத்திரம்தான் கூடுதலான மீன்களை பிடிக்கக் கூடியதாக இருக்கும்.
இந்நிலையில், ஜெலி மீன்களினால் அன்றாடம் பிடிபடும், மீன்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன. அதுமாத்திரமின்றி மீன்கள் வந்தாலும் அதனை பிடிக்க முடியாத நிலை உருவாகி இருப்பதாகவும் கரைவலை மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago