2025 மே 22, வியாழக்கிழமை

‘கரையோரத்தைப் பாதுகாப்போம்’

வா.கிருஸ்ணா   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தேசிய கரையோர, கடல் வளங்களின் பாதுகாப்பு வாரமும் கரையோர தூய்மைப்படுத்தலும் தேசிய நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் கடற்கரையில் இன்று (19) நடைபெற்றது.

மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கடல்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் கரையோரம்பேணல் மூலவள முகாமைத்துவ திணைக்களம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

கடல்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் கரையோரம்பேணல் மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஆர்.ரஜீகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதிகளாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம், கடல்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் கரையோரம்பேணல் மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் கமாண்டர் புத்திக ஜயவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடல் வளத்தைப் பாதுகாக்கும் வகையில் 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இறுதி வாரம், தேசிய கரையோர மற்றும் கடல் வளங்களின் பாதுகாப்பு வாரமும் கரையோர தூய்மைப்படுத்தல் நிகழ்வு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய நடத்தப்பட்டுவருகின்றது.

இந்த வாரத்தில் கடற்கரைப்பகுதி தூய்மைப்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .