2025 மே 10, சனிக்கிழமை

கற்கைத் தரத்தை உறுதிப்படுத்துமாறு மகஜர் கையளிப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா கற்கைக்கான தரத்தை உறுதிப்படுத்தக்கோரி, உயர் கல்வியமைச்சர் றவூப் ஹக்கீமுக்கான கோரிக்கை மகஜர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தால் நான்கு வருட காலப்பகுதியைக் கொண்ட வர்த்தகத்துறை பட்டத்துக்கு சமனானது என அங்கிகாரம் வழங்கப்பட்ட கற்கை நெறியான உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா கற்கையைப் பூர்த்தி செய்கின்றவர்கள் அரச தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்கின்ற போது, தொடர் புறக்கணிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன மாணவர்கள் இந்த விடயங்களை சுட்டிக்காட்டி, இந்த கற்கை நெறிக்கான தரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்து கையெழுத்திட்ட கோரிக்கை மகஜரை, உயர் கல்வியமைச்சரின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீனிடம் இன்று (20) கையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X