2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கற்சேனை பிரதான நாற்சந்தியில் மீண்டும் தாமரைப் பூ

Suganthini Ratnam   / 2017 ஜூலை 11 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வ.துசாந்தன்

மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறை, கற்சேனை பிரதான நாற்சந்தியின் நடுவில் தாமரைப் பூ மீண்டும் அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மண்முனை தென்மேற்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்றது. இதன்போதே, மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அம்பிளாந்துறை, கற்சேனை, வெல்லாவெளி, வால்கட்டு ஆகிய இடங்களுக்கு செல்வதற்கான நாற்சந்தியின் நடுவில் தாமரைப் பூ சீமெந்தினால்  அமைக்கப்பட்டிருந்தது.

வீதிப் புனரமைப்பைக் கருத்திற்கொண்டு  கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர், அத்தாமரைப்
பூவை  வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் உடைத்திருந்தனர்.

இதன்போது, அத்தாமரைப் பூவை அகற்ற வேண்டாம் என்று மக்கள் எதிர்ப்பை  வெளியிட்டிருந்தனர். ஆனாலும், அச்சந்தியிலிருந்து  தாமரைப் பூ உடைத்து  அகற்றப்பட்டது.
அச்சந்தியிலிருந்த தாமரைப் பூவை அங்குள்ள மக்கள் தமது ஞாபகச்சின்னமாக பராமரித்து வந்துள்ளனர். அதேவேளை, அச்சந்தியை தாமரைப் பூ சந்தி எனவும் இற்றைவரை அங்குள்ள மக்கள் அழைக்கின்றனர்.

இந்நிலையில் அகற்றப்பட்ட அதே இடத்தில், அதே வடிவில்; தாமரைப்பூ அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களும் பிரதிநிதிகளும் தெரிவித்தமைக்கு அமைய, அதே வடிவில் தாமரைப் பூ அமைக்கப்படவுள்ளது எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X