Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூலை 05 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
ஓட்டமாவடி, தியாவட்டவான் பகுதியில் கிணறு வெட்டிய நிலையில், கற்பாறையை உடைப்பதற்காக வெடியொன்று வைத்தமையால், பகுதியளவில் 12 கட்டடங்களும் வாகனமொன்றும் சேதமாகியுள்ளன என, பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் கிணறு அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் காணப்பட்ட கற்பாறையை உடைப்பதற்காக செவ்வாய்க்கிழமை (4) மாலை வெடியொன்று வைக்கப்பட்டது.
இந்த அதிர்வின் காரணமாக பகுதியளவில் 10 வீடுகளும் மரியம் கிராம பள்ளிவாசல் மற்றும் வைத்தியசாலையும் சேதமாகியுள்ளன.
பள்ளிவாசல் மற்றும் வைத்தியசாலை உட்பட சில வீடுகளின் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன், கற்கள் வீசிவந்து சில வீடுகளின் ஓடுகள் மற்றும் கண்ணாடிகளைச் சேதப்படுத்தியுள்ளன.
இந்தச் சம்பவத்தின்போது, எவருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
24 May 2025
24 May 2025