Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 17 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலய ஆசிரியர்களின் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பி.உதயரூபன் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கல்குடாக் கல்வி வலயத்தில் கடமையாற்றுகின்ற சுமார் 60 ஆசிரியர்களுக்கு ஜனவரி நடுப்பகுதி முதல் இடமாற்றம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்களில் சுமார் 30 ஆசிரியர்களுக்கு இடமாற்றப்படுவதற்கான கடிதங்கள் கிடைத்துள்ளன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மேற்படி வலயத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் இடமாற்றமானது பாடசாலை மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் சுயாதீனச் செயற்பாடுகளை மழுங்கடிக்கும் வகையிலும் கல்வி நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையிலும் அமைந்துள்ளது. பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் கடந்த காலத்தில் கஷ்;டப் பிரதேசப் பாடசாலைகளில் அர்ப்பணிப்புடன் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்துவந்த பல ஆசிரியர்கள், மீண்டும் கஷ்;;டப் பிரதேசப் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பாதிப்படைந்துள்ளனர்.
வருட ஆரம்பத்தில் வழங்கப்பட வேண்டிய இந்த இடமாற்றங்கள் தாமதப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளதால், கல்குடா கல்வி வலய கல்வி நடவடிக்கைகள் சீர்குலைந்துள்ளன.
இந்த ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் தொடர்பில் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் மௌனம் சாதிக்காமல், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எமது சங்கம் வேண்டுகோள் விடுக்கின்றது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago