2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கலைஞர்களுக்கு மேடை

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 03 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் வாவிக்கரையோரப் பகுதியில் கலைஞர்களுக்கான மேடை அமைக்கப்படவுள்ளது.

ஏறாவூர் நகரசபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள மேடை அமைப்புக்கான  25 இலட்சம் ரூபாய் நிதியுதவியை முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  அலி ஸாஹிர் மௌலானா வழங்கியுள்ளார்.

ஏறாவூரில் கலையாற்றல்களை மேடையேற்றுவதற்கும் நிகழ்ச்சி வெள்ளோட்டம் பார்ப்பதற்கும் மேடையின்றி கலைஞர்கள் சிரமப்படுகின்றனர். இதனைக் கருத்திற்கொண்டு கலைஞர்களுக்காக இந்த மேடை அமைக்கப்படவுள்ளதாக ஏறாவூர் ஹனிமூன் கலா மன்றத் தலைவர் ஏ.சி.அப்துல் றஹ்மான் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X