2025 மே 10, சனிக்கிழமை

கலைஞர்கள் கௌரவிப்பு

Gavitha   / 2016 ஜனவரி 19 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹூஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவிலிருந்து மாகாண மட்டத்தில் பிரகாசிக்கும் விளையாட்டு வீரர்களையும் கலாபூஷணம் விருது பெற்ற தேசிய கலைஞர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு பிரதேச செயலக சபா மண்டத்தில் திங்கட்கிழமை (18) பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்றது.

ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலக கலாசார பிரிவும் விளையாட்டுப் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் 'அப்பாச் செல்லம்' என்ற சிறுவர் காணொளித் தயாரிப்பில் சிறந்த திரை ஒளியமைப்புக்காக தேசிய விருது பெற்ற எஸ். கிருஷ்ணகாந்த் என்ற கலைஞரும் கலாபூஷணம் விருது பெற்ற பி. கமலநாதன் என்பரும் கௌரவிக்கப்பட்டனர்.

அதேவேளை மாகாண விளையாட்டு விழாவில் விருது பெற்ற சுமார் 20க்கும் மேற்பட்ட விளையாட்டு வீர வீராங்கனைகளும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், உதவிப் பிரதேச செயலாளர் நவரூபரஞ்சனி முகுந்தன், பிரதேச சபைச் செயலாளர் குமுதா ஜோன்பிள்ளை, பிரதேச கலாசார உத்தியோகத்தர் பி. சிவராம், விளையாட்டு உத்தியோகத்தர் ஆர். சிவகுமார் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X