Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், வா.கிருஸ்னா
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கற்கும் மூன்றாம் வருடம், மற்றும் இரண்டாம் வருட அரையாண்டில் கற்கும் மாணவர்கள் தங்களின் சில கோரிக்கைகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அக்கறையின்றிச் செயற்படுவதாககத் தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில. ஈடுபட்டனர்.
'எங்களின் உரிமையான கல்விச் சுற்றுலா விடயத்தில் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் அக்கறையின்றிச் செயற்படுகின்றனர். தற்போது எமது கல்விச் சுற்றுலா கடந்த 2 மாத காலமாக பிற்போடப்பட்டுக் கொண்டே வருகின்றது. இவற்றால் எமது பரீட்சை மற்றும் கல்வி நடவடிக்கைகள் என்பன பாதிக்கப்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது. இவற்றைக் கண்டித்தே நாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றோம்' என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
'விடுதிகளுக்கு ஒழுங்கான பாதுகாப்பு இல்லை, நிர்வாக அடக்குமுறை, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில் நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. மாணவர்களின் கல்விசார் பிரச்சினைகள் தொடர்பில் நிர்வாகத்தினர் அலட்சியம் போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை மாணவர்கள் இதன்போது ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago