2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கல்லடியில் பஸ் தரிப்பிடம் அகற்றல்

Suganthini Ratnam   / 2016 மே 15 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, கல்லடிப் பிரதான நெடுஞ்சாலையின் இருமருங்குகளிலும் நேருக்குநேராக இருந்த பஸ் தரிப்பிடங்களில் ஒன்று சனிக்கிழமை (14) அகற்றப்பட்டது.

இந்த நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்கும் வகையிலேயே இந்த பஸ் தரிப்பிடங்களில் ஒன்றை அகற்ற தாம் நடவடிக்கை எடுத்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

இரு திசைகளிலுமிருந்து போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் மற்றும் இ.போ.ச பஸ்கள், ஒரே நேரத்தில் இரு தரிப்பிடங்களிலும் நிறுத்த வேண்டியிருந்தது. இதனால், வாகன விபத்துகள் ஏற்படுகின்ற ஓர் அபாயகரமான நிலை அவ்விடத்தில் காணப்பட்டது.

இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு வீதி மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்கள், காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி, இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகஸ்தர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகளையும் நேரில் வரவழைத்து நிலைமையினை சுட்டிக்காட்டியதை அடுத்து இந்த பஸ் தரிப்பிடம் அகற்றப்பட்டு சற்றுத் தொலைவில் நிறுவப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X