Suganthini Ratnam / 2016 ஜூலை 07 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக குறித்த அதிகாரிகளை பாடசாலைகளில் அதிபர்களாக கடமையாற்றுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவிடம் இன்று வியாழக்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை அதிபர் சங்கம் ஆகியனவே இந்தக் கோரிக்கையை விடுத்ததாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், 'கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இம்மாகாணத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் 174 பேருக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
இவ்வேளையில், இம்மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் சில தேசிய பாடசாலைகளில் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் நிரந்தர அதிபர்களாகவும் தற்காலிக அதிபர்களாகவும் 2015ஆம் ஆண்டிலிருந்து நியமிக்கப்பட்டு வருகின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு அதிபர்களாக இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்தோரை மட்டுமே நியமிக்க வேண்டும் என்பதுடன், இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளை நியமிக்க வேண்டாம் என்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் அறிக்கை விட்டிருந்தார். இருப்பினும், அது கவனத்தில்; கொள்ளப்படவில்லை.
மேலும், இம்மாகாணப் பாடசாலைகளில் அதிபர்களாக கடமையாற்றுகின்ற இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் தரத்தைச்; சேர்ந்தவர்களை நீக்கி, கல்வி அலுவலகங்ககளில் இணைக்குமாறு மாகாண ஆளுநரினால் ஏற்கெனவே வழங்கப்பட்ட உத்தரவும் அமுல்படுத்தப்படவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'எனவே, கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிரந்தர அதிபர்களாகவும் தற்காலிக அதிபர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளை அப்பதவிகளிலிருந்து நீக்கி அவர்களை கல்வி அலுவலகங்களில் இணைக்க வேண்டும்' எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
11 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
9 hours ago