2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கல்வியும் விளையாட்டும் நாணயத்தின் இரு பக்கங்கள்

Gavitha   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக கல்வியும் விளையாட்டும் காணப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் விளையாட்டுப் போட்டிகள் இணைப்பாட செயற்பாடுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பட்டிருப்புக் கல்வி வலயக் கல்விப் பணிமனையின், பிரதிக் கல்விப் பணிப்பாளர் மா.உலககேஸ்பரம் தெரிவித்துள்ளார்.

மட்.களுமுந்தன்வெளி அரசியர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த உடல் திறனாய்வுப் போட்டி வியாழக்கிழமை (25) களுமுந்தன்வெளி பொது விளையாட்டு மைதானத்தில் பாடசாலை அதிபர் சி.சிவபாதம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் மேலும் உரையாடுகையில்,  

'பட்டிருப்புக் கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுப் போட்டியில் கடந்த வருடம், முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதற்குரிய பங்காளிகளான மாணவர்களை நாம், வாழ்த்துகின்றோம்.  அதபோல் தேசிய மட்ட விளையாட்டுக்களிலும், பட்டிருப்புக் கல்வி வலயத்திலிருந்து அதிகளவான மாணவர்கள் பங்கு கொண்டு வருகின்றார்கள்' என்று அவர் கூறினார்.

எனவே கிராமப் புறங்களிலுள்ள மாணவர்கள் பாடசாலை மட்ட விளையாட்டுக்களுடன், மாத்திரம் நின்றுவிடாமல் தேசியமட்டம் வரைச் சென்று திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.  

தொடர்ந்து பின்தங்கிய பிரதேசம், பின்தங்கிய பிரதேம் என்று கூறிக் கொண்டிருக்காமல், தொடர்சியான முன்நோக்கிய சிந்தனைகளினூடாக் செயற்பட வேண்டும். இவற்றுக்கு கல்வித் திணைக்களம் சார்பாக நாமும் இப்பிரதேச மாணவர்கள் மீது அதிகளவு அக்கiயுடன் செயற்பட்டு வருகின்றோம் என்றும் அவர் கூறினார்.

மாணவர்கள் நிகழ்காலத்தில் ஏற்பட்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டால், எதிர்காலம் தானாகவே நல்லதாக அமைந்துவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .