2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் நியமனம்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்,வடிவேல் சக்திவேல்

கல்வியியல் கல்லூரிகளில் கற்கையைப் பூர்த்திசெய்து, வெளிமாகாணங்களில் நியமனம் பெற்றுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த  ஆசிரியர்களுக்கும் அம்மாகாணத்திலேயே நியமனம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின்போது, ஆசிரியர்கள் தொடர்பான சகல ஆவணங்களும் அவரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து, மேற்படி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்றையதினம் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
எனவே, அடுத்த வாரமளவில் அவர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X