Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்
வாழைச்சேனை கமலநல கேந்திரப் பிரிவுக்குட்பட்ட விவசாயிகளில் சிலருக்கு பெரும்போக மானிய உரக் காப்புறுதி நஷ்டஈடு வழங்கப்படாமை தொடர்பாக நிலவிவந்த முரண்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல், கமலநல கேந்திர நிலையத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றது.
2014 -2015ஆம் ஆண்டு பெரும்போகச் செய்கையில் வெள்ளப் பாதிப்புக்குள்ளான 1,700 விவசாயிகள் மானிய உரக்காப்புறுதி நஷ்டஈட்டுக்காக விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 146 பேருக்கு பணமாகவும் 932 பேருக்கு காசோலை மூலமாகவும் நஷ்டஈடு வழங்கப்பட்டது. இந்நிலையில், ஏனைய விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படாமைக்கான காரணம் என்னவென்று இதன்போது விவசாயிகள் கேள்வியெழுப்பினர்.
குறித்த விண்ணப்பப்படிவத்தில் உரமானிய பற்றுச்சீட்டு இணைக்கப்படாமை, உரிய திகதி மற்றும் கையொப்பம் இடாமை, பற்றுச்சீட்டுகள் மாற்றி இணைக்கப்பட்டமை உள்ளிட்ட தவறுகளை விண்ணப்பதாரிகள் விட்டுள்ளனர். இதனாலேயே, விவசாயிகள் சிலருக்கு மானிய உரக் காப்புறுதி நஷ்டஈடு வழங்கமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
தவறுகள் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரிகளின் விடயம் தொடர்பாக காப்புறுதி திணைக்களத்தின் கவனத்துக்கு கொண்டுவந்து தீர்வை பெற்றுத் தருவதாக வாழைச்சேனை கமலநல கேந்திர நிலையத்தின்; அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.ஏ.றசீட் தெரிவித்தார்.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025