Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
வா.கிருஸ்ணா / 2019 மார்ச் 12 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லிணக்கம் என்ற போர்வையில், கிழக்கிலுள்ள தமிழர்கள், பல வழிகளிலும் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை, தமிழ் அரசியல் தலைமைகள் உணர்ந்துகொள்ள வேண்டுமென, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக, கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வரவேண்டுமென, இதன்போது அவர் கேட்டுக்கொண்டார்.
28 உப பிரதேச செயலகங்களில், 27 பிரதேச செயலகங்கள் தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மட்டும் இதுவரையில் தரமுயர்த்தப்படவில்லை என்றார்.
மேலும், இந்த அரசாங்கத்தின் வரவு – செலவுத்திட்டம் உட்பட பிரதமரைப் பாதுகாப்பதற்கு ஆதரவுகளை வழங்கியுள்ள போதும், இப்பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த முடியாத நிலையில் இருக்கின்றோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago