2025 மே 23, வெள்ளிக்கிழமை

கல்வி எழுச்சி மாதம் பிரகடனம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காத்தான்குடியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கல்வி எழுச்சி மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.சபீல் நழீமி தெரிவித்தார்.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனமும் காத்தான்குடி மீடியா போரமும் இணைந்து நடத்திய கல்வி எழுச்சி மாநாட்டின் போதே, இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் மாநாட்டு மண்டபத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற இந்த கல்வி எழுச்சி மாநாட்டில், காத்தான்குடியில் பெண் மாணவிகளை விட ஆண் மாணவர்கள் கல்வியில் பாரிய வீழ்ச்சி காணப்படுவதனால் இதற்கான விழிப்பூட்டல்கள் இடம்பெறவேண்டியுள்ளதுடன், ஆண் மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களில் பெற்றோர்கள் மிக அக்கரையுடனும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பதுடன், காத்தான்குடி கல்விக்கோட்ட பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் புள்ளி விவரங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன.

இதையடுத்து, இந்த மாநாட்டின் தீர்மானமாக காத்தான்குடியில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் கல்வி எழுச்சி மாதமாகப் பிரகடனப்படுத்தப்பத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கல்வி எழுச்சி மாதத்தில் மாணவர்களின் பெற்றோர்களைச் சந்தித்தல், கல்வி எழுச்சி பேரணிகளை நடத்துதல், அதிபர், ஆசிரியர்களைச் சந்தித்தல், வெள்ளிக்கிழமை ஜும்ஆக்களில் கல்வி தொடர்பாக விழிப்புனர்வு செய்தல் உலமாக்களை இதற்காகத் தூண்டுதல், அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளல் போன்ற பல்வேறு விடயங்களுடன் காத்தான்குடி மத்திய கல்லூரி விடயம் தொடர்பிலும் பூரண கவனம் செலுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டன.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் பொறியியலாளர் ஏ எம் தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டை செயலாளர் அஷ்ஷெய்ஹ் ஏ எல் எம் சபீல் நளீமி நெறிப்படுத்தினார்.

மாநாட்டின் விசேட சொற்பொழிவை, பேராசிரியர் எம் கலீல் றகுமான் நிகழ்த்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X