2025 மே 08, வியாழக்கிழமை

கல்விசாரா ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, பேரின்பராஜா சபேஷ், எம்.எஸ்.எம். ஹனீபா, எம்.ஏ.றமீஸ்

சம்பள உயர்வு உட்பட 11 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, தென் கிழக்குப் பல்கலைக்கழக வாயிலிலும் கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக முன்றலிலும், கல்விசாரா ஊழியர்கள், இன்று (28) பணிப் பகிஷ்கரிப்புச் செய்து, கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில், கல்விசாரா ஊழியர்சங்க உறுப்பபினர்கள், நிர்வாகச் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்க சம்மேளனமும் பல்கலைக்கழகங்களின் கூட்டுக்குழுவும் இணைந்து தங்களது ஊழியர்களுக்கு பெற்றுக்கொடுக்கக் கூடிய நலன்கள் தொடர்பில் ஏற்பாடு செய்த இரு நாள் தொழில் சங்க நடவடிக்கையின் பொருட்டு, இப்பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய இன்றைய தினம் (28) தத்தமது பல்கலைக்கழகங்களிலும், நாளை (29) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாகவும் பாரியளவிலான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, தொடர்ந்தும் தமது கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்க சம்மேளனமும் பல்கலைக் கழகங்களின் கூட்டுக்குழுவும் அறிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X