Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மார்ச் 27 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மருந்துக் களஞ்சியசாலையை தற்காலிகமாக மாவட்டச் செயலகத்தின் கள்ளியன்காட்டிலுள்ள களஞ்சியசாலையில் இயங்க வைக்க முடியுமென மாவட்டச் செயலர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (27) நடைபெற்றபோது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான சிறுநீரகச் சத்திர சிகிச்சைப் பிரிவுக்குரிய கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான 600 மில்லியன் ரூபாய் நிதி திரும்பிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மருந்துக் களஞ்சியசாலை இயங்கும் இடத்திலேயே, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான சிறுநீரகச் சத்திர சிகிச்சைப் பிரிவுக்குரிய கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், மருந்துக் களஞ்சியசாலை அவ்விடத்தில் தொடர்ந்து இயங்குவதால், சிறுநீரகச் சத்திர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடத்தை அமைப்பதில் தாமதம் நிலவி வருகின்றது.
இந்த விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.இப்ராலெப்பை ஆகியோரிடம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனும் வினவினர்.
தங்களின் மருந்துக் களஞ்சியசாலைக்கு வேறு பொருத்தமான கட்டடம் தெரிவுசெய்யப்பட வேண்டுமென்று இவர்கள் கூறினர். இதனை அடுத்து, கள்ளியன்காட்டிலுள்ள களஞ்சியசாலையை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மருந்துக் களஞ்சியசாலையாக தற்காலிகமாகப் பயன்படுத்த முடியுமெனத் தெரிவித்த மாவட்டச் செயலர், போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிச் செல்லக்கூடாது எனவும் கூறினார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago