Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேச சபையை நகர சபையாக தரம் உயர்த்துவதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாகாணசபை உறுப்பினர் கே.கருணாகரம் (ஜனா) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணசபையின் வரவு -செலவுத்திட்ட விவாதம் புதன்கிழமை (3) நடைபெற்றபோதே, அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'பட்டிருப்புத்தொகுதியில் அதிகளவான மக்கள் செறிந்துள்ள பிரதேசம் களுவாஞ்சிக்குடி பிரதேச சபைப்; பிரிவாகும்;. எனவே, எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு முன்னர் களுவாஞ்சிக்குடி பிரதேச சபையை நகர சபையாக அறிவிப்பதற்குரிய நடவடிக்கையை முதலமைச்சர் எடுக்க வேண்டும்' என்றார்.
'மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் பிரதான வீதியை அண்டியிருக்கும் பிரதேச சபைகள், நகர சபைகள், மாநகர சபையை எடுத்துக் கொண்டால் அவற்றின் சபைகளை நடத்தக்கூடியளவுக்கு வருமானம் ஈட்டக்கூடியதாக இருக்கின்றது.' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago